சூடுபிடிக்கும் மிசோரம் தேர்தல் களம்! எகிறும் எதிர்பார்ப்பு.. வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
ஐய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றுதான் இதை திரும்பப்பெற கடைசி நாளாகும்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது. காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது. தற்போது மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்திருக்கிறது. 16 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தேர்தல் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிடுகிறார். தனது கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்றுதான் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications