இன்று சீமாந்திரா பந்த்: இருசக்கர வாகனங்களைக் கூட அனுமதிக்க மறுப்பு
திருப்பதி: தனி தெலங்கானாவை எதிர்த்து இன்று (செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை) சீமாந்திரா பகுதி முழுவதும் பந்த் நடத்துகிறது கூட்டு நடவடிக்கை குழு.
கடந்த 54 நாட்களாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்கும் முடிவை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி போராட்டக்காரர்கள் தங்கள் பணிகளையும் விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் தனி தெலங்கானா மாநில அறிவிப்பை திரும்பப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே ஒருமுறை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது, திருமலைக்கு 1 முறை பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் நடைபெற்ற 2 முழு அடைப்பு போராட்டத்தின் போதும், தேவஸ்தான அதிகாரிகளின் வேண்டுகோளால் திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இன்று நடைபெறும் பந்த்தில் திருப்பதிக்குச் செல்ல போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருசக்கர வாகனங்களுக்குக் கூட தடை விதித்துள்ளது கூட்டு நடவடிக்கைக் குழு. ஏற்கனவே, இன்று பக்தர்கள் திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்கவும் என கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று முதல் இம்மாத 30-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, திருப்பதியில் உள்ள துணிக்கடை வியாபாரிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 25-ஆம் தேதி முதல் 1 வாரம் வரை காலை 9 மணிமுதல் 11 மணிவரை மின்சாரத்தை துண்டித்து விட்டு வியாபாரம் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications