தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த சாத்வி.. 72 மணி நேரம் மியூட் போட்ட ஆணையம்.. பிரச்சாரத்திற்கு தடை!
தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது.
போபால்: தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சாத்வி பிரக்யா தாக்குர்தான் இந்த தேர்தலில் பாஜகவின் வைரல் பிரச்சார பீரங்கி என்று கூட கூறலாம். குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி இருக்கும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.
இவரது சர்ச்சையான கருத்துக்களை பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலரே சகித்துக் கொள்ள முடியாமல் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இவர் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போபாலில் போட்டியிடுகிறார்.

என்ன சொன்னார்
கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் சாத்வி பிரக்யா தாக்குர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன்.
போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேவிற்கு நான்தான் சாபம் விட்டேன். அதனால் அவர் பலியானார், என்று வரிசையாக நிறைய கருத்துக்களை தெரிவித்தார்.

தடை
இந்த நிலையில் இவரது பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பலர் புகார் அளித்தனர். இதனால் தேர்தல் ஆணையம் இவர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவு பிறப்பித்தது. தற்போது பிரக்யா தாகூர் மீது தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

என்ன நடவடிக்கை
அதன்படி சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்து உள்ளது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தடை இன்று காலையில் இருந்து அமலுக்கு வருகிறது. ஏற்கனவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இப்படி சர்ச்சையாக பேசி தடை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications