அவுக டூரிஸ்ட் கேங்...வாக்குறுதி கொடுப்பாங்க...செய்யவே மாட்டாங்க...அமித்ஷா மீது திரிணாமுல் அட்டாக்
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட எதையும் அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் சாடியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இருப்பினும் திரிணாமுல்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒற்றை மனிதராய் திரிணாமுல் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி, பாஜகவை எதிர்த்து களம் காண்கிறார். பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என பலரும் இடைவிடாமல் பிரசாரம் செய்கின்றனர்.
அத்துடன் திரிணாமுல் காங்கிரஸின் மன உறுதியை அழிக்கும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என வந்து சேருவோர் அத்தனை பேரையும் வாரி அணைத்துக் கொள்கிறது பாஜக. இந்த நிலையில் உள்உறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெரிக் ஓ பிரையன், அவர்கள் எல்லாம் டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்). வருவார்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். ஆனால் ஒருபோதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது இல்லை என்பதே வரலாறு என கடுமையாக சாடியுள்ளார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications