சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா? ஜெ.,வுக்கு எதிராக மனு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் வகிப்பது சரியல்ல, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்து சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது வரை பல வழிகளில் வாய்தா வாங்கி வழக்கிற்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா.
மேலும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 16-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
பதவி விலக கோரி வழக்கு
இந்நிலையில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் ராசாராம் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனு மீதான விசாரணையில் இருவரும் வாதிடுகையில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு முதல்வராக இருப்பதால் பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இன்னும் பல முறைகேடுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒருவர் பதவியில் இருந்து கொண்டு வழக்கை சந்திப்பது சரியானதாக இருக்க முடியாது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பில் இருந்த சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் போது இவர் பொறுப்பில் இருந்தால் முறையான, நேர்மையான விசாரணை நடக்க முடியாது. இவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டே கூறியது. இதனையடுத்த அவர் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கே இப்படி ஒரு நிலையை எடுக்கும் போது, ஒரு மாநில முதல்வராக இவர் எப்படி நீடிக்க முடியும், இது சரியாகாது எனவே இவர் முதல்வர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர்.
இந்த பொறுப்பில் இருந்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
விவாதத்தை கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா, இது தொடர்பாக விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கைத்தான் விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது என்றார்.
ஆனால் மனுதாரர்கள் இதனை மறுத்தனர். உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். பின்னர் தீர்ப்பு வழங்குங்கள் என்று கோரினர்.
இதனையடுத்து வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications