ஆதார் எண்ணை வெளியிட்டு சிக்கிய டிராய் இயக்குனர்.. மகளுக்கு இமெயிலில் மிரட்டல் விடுத்த ஹேக்கர்கள்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், மகளுக்கு ஹேக்கர்கள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், மகளுக்கு ஹேக்கர்கள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், ஆதார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. தேவையில்லாமல் சமூக வலைத்தளத்தில் அவர் விட்ட சவால், தற்போது அவருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிஎஸ் சர்மா, ஆதார் மிகவும் பாதுகாப்பானது என்று பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில் சர்மாவின் பேட்டியை பார்த்த நபர் ஒருவர், உங்களுக்கு ஆதார் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட முடியுமா என்று கேட்டு இருக்கிறார்.
|
சவால் விட்டார்
இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்டு முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார். இதற்கு எலியாட் என்ற, பிரான்ஸ் ஹேக்கர் அவர் தகவல் அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
|
போன் நம்பர்
இந்த நிலையில் எலியாட், சர்மாவின் ஆதார் எண் மூலம் அவரது போன் நம்பர் , வங்கி கணக்கு, மகளின் புகைப்படம் எல்லாவற்றையும் எலியாட் வெளியிட்டார். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். இதேபோல் பலரும் அவரது விவரங்களை திருடினார்கள்.
|
வங்கி விவரம்
இந்தநிலையில்தான், சர்மா பெரிய பிரச்சனையில் சிக்கினார். அவருக்கு நேற்று ஹேக்கர்கள் 1 ரூபாய் பணம் அனுப்பி இருக்கிறார்கள் . அதாவது ஆதார் பேமண்ட் மூலம், அவருக்கு 1 ரூபாய் பணம் அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் அவரது வங்கி கணக்கு விவரத்தையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

மெயில்
இந்த நிலையில் தற்போது அவரது மகளின் மெயில் ஐடியை கண்டுபிடித்து, அதற்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அவரது மகள் கவிதா சர்மாவின் புகைப்படத்தை ஹேக்கர்கள் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

என்ன மிரட்டல்
அந்த மெயிலை இந்தியாவில் உள்ள சில செய்தியாளர்களுக்கும் பார்வேர்ட் செய்து இருக்கிறார்கள். அதில் சர்மா உடனே மன்னிப்பு கேட்கவேண்டும். ஆதார் பாதுகாப்பு இல்லை என்ற தகவலை வெளியிட வேண்டும். பின் அவருடைய கணக்கை டெலிட் செய்ய வேண்டும், இல்லையென்றால், உங்களை பற்றிய மோசமான ரகசியத்தை வெளியிட வேண்டி இருக்கும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications