டாய்லெட் பிரேக் கூட இல்லை: மனித உரிமைகள் ஆணையத்திடம் ரயில் டிரைவர்கள் புகார்
டெல்லி: மனிதநேயம் இல்லாத, மோசமான நிலையில் பணியாற்ற வைக்கப்படுவதாகக் கூறி ரயில் டிரைவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகியுள்ளனர்.
இந்திய ரயில்வே துறையில் வேலை செய்யும் 69 ஆயிரம் ரயில் டிரைவர்கள் தங்களின் பணியிட நிலை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நாங்கள் மோசமான நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சில நிமிடங்கள் கூட எங்களுக்கு ஓய்வு இல்லை. சாப்பிட ஏன் இயற்கை உபாதை கழிக்கக் கூட நேரம் அளிக்கப்படுவது இல்லை.

12 மணிநேர ஷிப்ட்டால் எங்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் ஏற்படுகிறது. ரயில் என்ஜின் பகுதியில் கழிப்பறைகளே கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவர்களுக்கு ஷிப்ட் நேரத்தில் சாப்பிட, இயற்கை உபாதை கழிக்க தனியாக பிரேக் விட முடியாது. அவ்வாறு செய்தால் பயணிகளின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும். மேலும் ரயில்கள் காலதாமதாக இயங்கும் என்று கருதுகிறது ரயில்வே நிர்வாகம்.
இது குறித்து ரயில் டிரைவர்கள் சங்க தலைவர் எஸ். கே. பந்தி கூறுகையில்,
இந்திய ரயில்வே தான் டிரைவர்களுக்கு பிரேக்கே தருவது இல்லை. டிரைவர்களுக்கு வார இறுதியில் கூட விடுப்பு இல்லை. டெல்லி மெட்ரோ டிரைவர்களுக்கு எல்லாம் மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை 40 நிமிடங்கள் பிரேக் அளிக்கிறார்கள். விமானிகளுக்கு கூட அடிக்கடி பிரேக் கிடைக்கிறது. ரயில் டிரைவர்கள் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேறு வேலை செய்ய வேண்டி உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications