நாளை முதல் நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு அமல்.. டிக்கெட் எவ்வளவு அதிகரிக்கிறது? முழு விவரம் இதோ!
டெல்லி: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் மாற்றமின்றி அதே கட்டணத்தில் நீடிக்கிறது. தொலைதூர ரயில்களில் சாதாரண 2ஆம் வகுப்பு ரயிலில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை.
501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது.

ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்
நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏசி அல்லாத விரைவு ரயில் பெட்டிகளில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை. 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது.
ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மெயில் மற்றும் விரைவு ரயில்கள்
NON AC
ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
AC Coach
குளிர்சாதன வசதி: இருக்கை குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி விரைவு ரயில்களில் முதல் வகுப்பு, 2 டயர், 3 டயர், ஏசி சேர் கார் வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு
அதிவிரைவு ரயில்களான தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களுக்கான கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ரயில் கட்டணத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் கடந்து தற்போது ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும் நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய நடைமுறைகள்
ரயில் கட்டண உயர்வுடன் நாளை ஜூலை 1 முதல் பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வர உள்ளன. குறிப்பாக, ஜூலை 1 ஆம் தேதி முதல் இ - ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இனிமேல், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் ஆதார் விவரங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும்.
-
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications