டெல்லிக்கும் பரவியது வன்முறை.. பஸ், ரயில்களுக்கு தீ வைப்பு
டெல்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேரா சச்சா ஆதரவாளர்களால் டெல்லிக்கும் கலவரம் பரவியுள்ளது. ஆனந்த்விகார் (ரெவா எக்ஸ்பிரஸ்) மற்றும் சாத்ரா ரயில் நிலையங்களில் முறையே 1 மற்றும் இரு ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

டெல்லியிலுள்ள பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை அருகே பஸ் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் செல்லும் பல பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பயணிகள் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே ராஜஸ்தானில் தேசா சச்சா ஆசிரமங்கள் மூடப்பட்டு ஆதரவாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
Here it begins in delhi too #LoniChowk @mahajournalist @imanojprabakar @GunasekaranMu @Zakka_Jacob pic.twitter.com/bnpolhOJfe
— Suchi Soundlover (@suchiseetharam) August 25, 2017
பஞ்சாப், சண்டிகருக்கு ராணுவம் விரைந்துள்ளது. டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டெல்லியில் கலவரம் பரவியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே டெல்லியில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக இரவு காவல்துறை அறிவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications