Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டேட்டா சேமிப்பிலிருந்து தொழில்நுட்ப சேவைகளுக்கு மாறுவது இ-அரசின் எதிர்காலம்: மனோஜ் குமார் மிஸ்ரா

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: "எங்கள் குறிக்கோள் என்பது அனைவருக்கும் இணைய சேவை கிடைக்கச் செய்வது' ஆகும். அடிமட்ட அளவில் அதிவேக இணைய இணைப்பை வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்கிறார் மனோஜ் குமார் மிஸ்ரா. ஒடிசா மாநில, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் இவராகும்.

இதோ அவரது வார்த்தைகளில் இருந்து:

Transitioning from data storage to technology-enabled services is the future of eGovernance: Manoj Kumar Mishra

எலக்ட்ரானிக்ஸ் & ஐடி துறையின் சமீபத்திய சாதனைகள் என்ன? ஒடிசா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மின்-நிர்வாக முயற்சிகள் சிலவற்றை பார்க்கவும்.

எலக்ட்ரானிக்ஸ் & ஐடி துறை டிஜிட்டல் வளர்ச்சியை கையில் எடுத்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் 5டி நிர்வாக மாதிரியுடன் இணைந்து இது செயல்படும், பல்வேறு துறைகளின் 250 சேவைகள் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளன. மேலும் 150 சேவைகளை ஆன்லைனில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

குடிமக்களை மையப்படுத்தி, ஒடிசா ஒன் என்ற ஒருங்கிணைந்த போர்ட்டலும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது, இந்தத் துறை 3,000 க்கும் மேற்பட்ட 'மோ சேவா கேந்திரா'க்களின் ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது மற்றும் ஒடிசா முழுவதும் 7,000 மையங்களை ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது பெரிய சாதனை மிக சமீபத்தியது, இது அரசாங்க அலுவலகங்களின் டேட்டா பரிமாற்றம் மற்றும் பரிமாற்றத்தில் புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை உறுதியளிக்கிறது. 332 கோடி ரூபாய் செலவில் ஒடிசா மாநில விரிவாக்க வலையமைப்பை (OSWAN) வலுப்படுத்தும் தொழில்நுட்பத் துறையின் தொலைநோக்கு விஷன் சமீபத்தில் மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் வகையில், இத்திட்டம் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய விஷயங்களில் ஒன்று, மாநில தலைமை அலுவலகம், 30 மாவட்ட தலைமையகம் மற்றும் 314 தொகுதி தலைமையகத்தில் இரண்டாம்நிலை அலைவரிசையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதள அலைவரிசை மேம்படுத்துதல், சுமையை பகிர்வது மற்றும் அதிக இணைப்பை இது உறுதி செய்யும். இது மல்டி புரோட்டோகால் லேபிள் ஸ்விட்சிங் (MPLS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த நம்பகத்தன்மையையும் பாதுகாப்பான இணைப்பையும் ஏற்படுத்தும்.

கோவிட் தொற்றுநோயை திறமையாக நிர்வகிப்பதே இந்த துறையின் மற்ற குறிப்பிடத்தக்க சாதனையாகும். மாநில ஐடி துறை கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டது. சமூக இடைவெளியை அமல்படுத்துவதன் மூலமும், சோதனை மற்றும் மருத்துவ சிகிச்சையின் திறனை அதிகரிக்க நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கொரோனா தொடர்பான முன்முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பெற ஒருங்கிணைந்த ஐசிடி கோவிட் போர்ட்டலை (covid19.odisha.gov.in) தொடங்கினோம்.

எலக்ட்ரானிக்ஸ் & ஐடி துறை ஒருங்கிணைந்த ஒடிசா மாநில டாஷ்போர்டை உருவாக்கியுள்ளது. ஒடிசாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மக்கள்தொகை மற்றும் புவியியல் ரீதியில் தற்காலிக மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கும் வசதி போன்றவை அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தொலைநோக்குத் திட்டம் '5T' திட்டத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எவ்வாறு உத்வேகம் அளிக்கிறது? இதில் சமீபத்திய சாதனை என்ன?

இந்தத் துறை நிரந்தரமாக 5T விஷனுடன் இணைந்திருக்கிறது, தொழில்நுட்பம் மற்றும் டீம் ஓர்க்கால் பலன்களை குறிப்பிட்ட நேரத்திற்குட்பட்ட முறையில் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. பெரிய தரவு, மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் விஷன் சக்தியைப் பயன்படுத்தும் மாநில டாஷ்போர்டு எங்களிடம் உள்ளது.

கொரோனா, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA)/மாநில உணவு பாதுகாப்பு திட்டம் (SFSS), ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA), KALIA & 5T ஆகிய ஐந்து முக்கிய விஷயங்களோடு மாநில டாஷ்போர்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. திறமையான தரவுகள் மற்றும் தொழில்நுட்பங்களின் சங்கமத்தின் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. இந்த டாஷ்போர்டு மக்களை மையமாகக் கொண்ட, ஈடுபாட்டுடன் உள்ளது. மாநில டாஷ்போர்டு மாநில அரசின் 25 க்கும் மேற்பட்ட முதன்மையான திட்டங்களை உள்நோக்கியுள்ளது. இது தவிர, மாநில அரசு 'மோ சர்கார்' (அல்லது எனது அரசு) முன்முயற்சி மற்றும் மக்கள் மைய நிர்வாகத்தின் எங்கள் நோக்கத்தை வலுப்படுத்த முன்வந்துள்ளது.

27 அரசுத் துறைகளின் சுமார் 240 சேவைகள் ஏற்கனவே மோ சர்க்கார் கீழ் உள்ளன. ஒவ்வொரு மாதமும், சராசரியாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வெளிச்செல்லும் கால் சென்டர்களால் கையாளப்படுகின்றன மற்றும் 8000+ அழைப்புகள் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களால் நேரடியாக குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

புதிய ஐசிடி கொள்கையில் முக்கிய இடங்கள் என்ன?

2014-15 இல், மாநில அரசு 2020 வரை நீடித்த ஒரு ஐசிடி கொள்கை வகுத்தது. ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழில்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியின் மாறிவரும் நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் ஐசிடி கொள்கை திருத்தப்பட்டுள்ளது. இறுதி கொள்கை ஆவணம் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. புதிய மற்றும் எதிர்கால ஐசிடி கொள்கை தற்போதுள்ள ஐடி தொழில்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதோடு ஐடி மற்றும் இஎஸ்டிஎம்மில் புதிய முதலீடுகளைச் செயல்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+