Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வீடியோவை பாருங்க.. கணவனை கொல்லும் முன்.. இன்ஸ்ட்டாவில் ஜாலியாக கப்புள் ரீல்ஸ் போட்ட சோனம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்தூர் பிசினஸ்மேன் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பல டிரெண்டாகி வருகிறது.

மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்றாவது நாளே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

crime

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் நடத்திய உரையாடலில், என் கணவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு தலைமறைவாக இருந்த சோனம், உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் திங்களன்று சரணடைந்தார். திருமணத்திற்கு முன்பே ரகுவன்ஷியிடம் சரியாக பேசாமல்.. தன்னை விலக்கிக் கொண்டதாகவும், திருமணமான மூன்று நாட்களிலேயே பிறகு தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம் குறித்து பேசிய அதிகாரிகள், "அவருக்கு திருமணம் பிடிக்கவில்லை.. இதனால் கணவர் ராஜா கொலை செய்யப்பட வேண்டும் என்று சோனம் விரும்பியதால், தொலைதூர இடத்தைத் தேர்ந்தெடுத்து இந்தக் கொலையைச் செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி

சோனமுக்கும், ராஜாவுக்கும் இந்தூரில் மே 10ஆம் தேதி திருமணம் நடந்தது. மே 21ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றனர். ராஜா கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சோனம் காசிப்பூரில் சரணடைந்தார். ஹனிமூன் சென்ற இடத்தில், ராஜா செராபுஞ்சி அருகே உள்ள ஒரு மலைப்பகுதி காட்டில் ஆழமான பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார். அவரை காணவில்லை என்று கொடுக்கப்பட்ட புகாரில்.. உள்ளூர் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். இருவரும் காணாமல் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

ராஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஷில்லாங் காவல்துறை தெரிவித்தது. இது விபத்து அல்லது வேறு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது. உத்தரபிரதேச காவல்துறையிடம் சோனம் சரணடைந்த பின்னர், ராஜாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் சோனமுடன் தொடர்பில் இருந்த ராஜ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராஜ் உடன் இருந்த காதல் காரணமாகவே இந்த கொலையை செய்ததாக சோனம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பல டிரெண்டாகி வருகிறது. இவர்கள் இருவரும் சந்தோசமாக நிறைய ரீல்ஸ் போட்டுள்ளனர்.

ஒன்றாக நிறைய காமெடி ரீல்ஸ் , டிரெண்டிங் பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டுள்ளனர். வெளியே சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டு லைக்ஸ் அள்ளிய சோனம்.. தனது கணவரை திட்டமிட்டு படுகொலை செய்ததை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாரெல்லாம் கைது

ராஜ்ஜை தவிர, ராஜாவைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பேர் ஆகாஷ் ராஜ்பூட், விகாஸ் என்கிற விக்கி மற்றும் ஆனந்த் ஆவர். நேற்று வெளியான உடற்கூறு ஆய்வறிக்கையில், ராஜாவின் உடலில் பல வெட்டு காயங்கள் இருந்ததாகவும், தலையின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இரண்டு பெரிய காயங்கள் இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மற்றும் சதித்திட்டங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+