திருச்சி குமாருக்கு கம்ப்யூட்டர் குழு:தம்பிதுரைக்கு மேலும் மூன்று பதவி
டெல்லி: துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, மேலும் மூன்று குழுக்களின் தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன பார்லிமென்ட்டில், லோக்சபா எம்.பி.,க்கள் அனைவருக்கும், கம்ப்யூட்டர்கள் வழங்குவதை இறுதி செய்யும் குழுவின் தலைவராக, திருச்சி தொகுதி எம்.பி., குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் நிர்வாக நடவடிக்கைகளை செம்மைப்படுத்துவதற்கு என, நாடாளுமன்றத்தில் நிலைக்குழு உட்பட, நிறைய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

புதிய லோக்சபா அமைந்தவுடன், இந்த குழுக்களை கைப்பற்றுவதில், அரசியல் கட்சிகள் இடையே பலத்த போட்டி இருக்கும். ஆனாலும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப, குழுக்கள் ஒதுக்கப்படும்.
நேற்று முன்தினம் இரவு, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின் படி, கம்ப்யூட்டர் வழங்கும் குழுவின் தலைவராக, குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, துணை சபாநாயகரான தம்பிதுரை, பட்ஜெட் மதிப்பீட்டுக் குழு, தொகுதி மேம்பாட்டு நிதிக்குழு, தனிநபர் மசோதா குழு என, மேலும் மூன்று குழுக்களின் தலைவர் பதவிகளையும் வகிப்பார் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபா எம்.பி.,க்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் குழு என்பது, மிகமிக சாதாரணமான குழு. இந்த குழு, வருடத்தில் ஒருமுறை கூடினாலே பெரிய விஷயம்.
இந்த கம்ப்யூட்டர் வழங்கும் குழுவை, கடந்த ஆட்சியில் துணை சபாநாயகர் கரியமுண்டாவே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications