நவநீதிகிருஷ்ணன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து - அதிமுக திருச்சி எம்பி குமார்
நவநீதிகிருஷ்ணன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அதிமுக திருச்சி எம்பி குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதிகிருஷ்ணன் பேசியது அவரது சொந்த கருத்து என்று அதிமுக திருச்சி எம்பி குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரி வரும் நிலையில் மத்திய அரசு அதுகுறித்து கிஞ்சித்தும் பார்க்கவில்லை. மாறாக தமிழகத்துக்கு பட்டை நாமம் போடுவதிலேயே குறியாக உள்ளது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய கூறுகின்றனர்.
நாங்கள் தற்கொலை செய்து கொள்ளகூட தயாராக உள்ளோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அதிமுக திருச்சி எம்பி குமார் கூறுகையில் காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்வோம் என்று நவநீதிகிருஷ்ணனின் சொந்த கருத்து ஆகும். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.
காவிரிக்காக நாங்கள் உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றனர் என்றார் அவர். இந்நிலையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு பதில் ராஜினாமா செய்யட்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications