அழகான வேட்பாளர்.. நடிகையுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்.. மேடை சரிந்து விபத்து
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேடையில் நடிகையுடன் செல்பி எடுப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மக்களவை தேர்தல் 6ம் கட்ட மற்றும் 7 கட்டமாக நாட்டில் மேற்கு வங்கம், அரியானா, டெல்லி மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் மக்களவை தேர்தல் அதிக இடங்களை வெல்லும் நோக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அங்கு பாஜக, இடதுசாரிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை கடும் போட்டியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நடிகர் நடிகைகளை வேட்பாளராக நிறுத்தி உள்ளதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் இறக்கிவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல நடிகையான நுஸ்ரத் ஜஹான் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பஷிரத் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கோபிபல்லாபூர் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரனை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக மேடையில் நடிகை நுஸ்ரத் ஜஹான் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் மேடையில் ஏறினார்கள். அவருடன் வளைத்து வளைத்து ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமானோர் ஏறியதால் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நடிகை நுஸ்ரத் ஜஹான் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் கோபிபல்லாபூரில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications