மே.வங்கம்: ''திரிணாமுலுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜ.க.வுக்கு விழுகிறது''.. திரிணாமுல் வேட்பாளர் புகார்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் பஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கூறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
பல வாக்குச்சாவடிகளில் மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது பா.ஜ.க.வுக்கு பதிவாகிறது என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27-ந் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கும், கடந்த 1-ந் தேதி 2-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் பரபரப்பு உண்டானது.

மம்தா தொகுதியில் பதற்றம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மம்தா ஓட்டு போட வந்தபோது சிலர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். 'பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து குண்டர்களை கொண்டு வந்து மக்களை ஓட்டு போட முடியாமல் அச்சுறுத்துவதாகவும், பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி பகீர் குற்றம்சாட்டினார். மேலும் மாநில கவர்னரிடமும் போன் செய்து புகார் தெரிவித்தார் மம்தா பானர்ஜி.

இன்று வாக்குப்பதிவு
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பாதுகாப்பு படையினர் கூறுவதாக அரம்பாக்கம் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா மொண்டல் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு சூழ்நிலை நன்றாக இருக்கிறது. வாக்குச்சாவடி 45-ல், மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது பா.ஜ.க.வுக்கு பதிவாகிறது. அரண்டி பகுதியில் திரிணாமுல் தொண்டர்கள் பாஜகவினரால் தாக்கப்பட்டனர். வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு நிற்கும் மத்திய படைகள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கூறுகிறார்கள்' என்கிறார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜ.க.வும் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு 24 பர்கானாஸ் டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த பா.ஜ.க வேட்பாளர் தீபக் ஹல்தார் கூறுகையில், 'தாகிரா பதுல்தங்காவில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் குண்டர்கள் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். பதற்றம் உருவாகுவதை தவிர்க்க வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications