ஆளுநரை சுற்றி வளைத்த திரிணாமுல் எம்எல்ஏக்கள்.. பாஜக கடும் அமளி! மே. வங்க சட்டசபையில் பரபர சம்பவம்
கொல்கத்தா: மேற்கு வங்க பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்டதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது,
மேற்கு வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபின்படி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது.
இருப்பினும், நேற்றைய தினம் மேற்கு வங்க சட்டசபையில் நடந்த நிகழ்வுகள், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் அம்மாநில முதல்வர் மம்தா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல்
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைக்கு திரிணாமுல் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாகச் சட்டசபையிலும் குரல் எழுப்ப பாஜக முடிவு செய்து இருந்தது.

பாஜக அமளி
அதன்படி நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் சமயத்தில் ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது உரையைப் படிக்கத் தயாரானார். அப்போது மேற்கு வங்க சட்டசபையின் மையத்திற்கு வந்த பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதனால் ஆளுநரால் தனது உரையை வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னரை தனது உரையை வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பாஜக உறுப்பினர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்ததால் ஆளுநரால் உரையைப் படிக்க முடியவில்லை,

சுற்றி வளைத்த திரிணாமுல் கட்சியினர்
இதனால் ஆளுநர் ஜகதீப் தங்கர் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து வெளியேற முனைந்தார். இப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரது இருக்கையை முற்றுகையிட்டு, அவரை சுற்றி வளைத்தனர். ஆளுநர் உரையைப் படிக்காமல் செல்லக் கூடாது என திரிணாமுல் கட்சியினர் ஜகதீப் தங்கரை சூழ்ந்ததால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜகதீப் தங்கர் தனது உரையின் முதல் வரியையும் கடைசி வரியையும் வாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவம் மே. வங்க சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மம்தா அட்டாக்
இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, சட்டசபையில் பாஜகவினர் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகச் சாடினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பாஜகவினர் திட்டமிட்டு இப்படி ஒரு நிலையை உருவாக்கினர். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைதியாகக் காத்திருந்தோம். எங்கள் எம்எல்ஏக்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதி காக்குமாறு சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டார். நானும் கேட்டுக் கொண்டான். இருப்பினும், பாஜகவினர் அமைதி காக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு அவமானம்" என்று சாடினார்.

மம்தா விளக்கம்
திரிணாமுல் உறுப்பினர்கள் ஆளுநரை வெளியேற விடாமல் தடுத்தது குறித்து மம்தா கூறுகையில், "கவர்னர் தனது உரையைப் படிக்காமல் வெளியேறியதால், எங்கள் உறுப்பினர்கள் தலையிட வேண்டி இருந்தது. அவர் உரையைப் படிக்காவிட்டால் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும். அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க, நாங்கள் அவரது உரையைப் படிக்கும்படி கேட்டுக் கொண்டார்" என்றும் மம்தா தெரிவித்தார். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்த மம்தா அவருடன் சுமார் 30 நிமிடங்கள் உரையாடினார்.

பாஜக குற்றச்சாட்டு
அதேநேரம் திரிணாமுல் எம்எல்ஏக்கள் ஆளுநரைத் தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரியுமான குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், "நமது அரசியலமைப்பு தலைவரான ஆளுநரை, திரிணாமுல் எம்எல்ஏக்கள், குறிப்பாகப் பெண் உறுப்பினர்கள் தாக்கினர். சபையில் நடந்ததை அனைவரும் பார்த்தனர்.திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications