முத்தலாக் சட்டத்திற்கு பிறகு முஸ்லிம் பெண்கள் கோரிக்கை இதுதான்!
பலதார திருமணத்தையும் மத்திய அரசு அரசு தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: பலதார திருமணத்தையும் மத்திய அரசு அரசு தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த தடைச் சட்டம் நேற்று முன்தினம் லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முத்தலாக் தடைச்சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உள்நோக்கம் கொண்டது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முத்தலாக் தடைசட்டத்திற்கு வரவேற்பு
இந்நிலையில் இஸ்லாமியர்களின் பழங்கால முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போரிட்டு வந்த இஸ்லாமியப் பெண்கள் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதிய ஆரம்பம் என புகழாரம்
இந்த தடைச்சட்டம் ஒரு புதிய ஆரம்பம் என்றும் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமி கணவர்கள் தங்களின் மனைவிகளுக்கு தலாக் சொல்வதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தலாக்கை விட மோசமானது
மத்திய அரசின் இந்த புதிய சட்டம் இஸ்லாமிய ஆண்களின் பலதார திருமணத்தை தடை செய்யும் வகையில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பலதார திருமணம் முத்தலாக்கை விட மோசமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட வேண்டும்
2வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் கணவர் போனிலேயே தலாக் சொல்லி விவாகரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட ரைசா என்ற பெண் மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பலதார திருமணமும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைமுறையில் உள்ள பலதாரமணம்
பலதார திருமணத்தால் பாதிக்கப்பட்ட ரிஸ்வானா என்ற பெண் கூறுகையில் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் பலதார திருமணம் இன்னும் இஸ்லாமியர்களிடையே நடைமுறையில் உள்ளது.

முத்தலாக் மட்டும் உதவாது
அதனையையும் அரசு தடை செய்ய வேண்டும். முத்தலாக் தடைசட்டம் மட்டும் பெண்களுக்கு உதவியாக இருக்காது என்றும் பலதார திருமணத்தால் பாதிக்கப்பட்ட ரிஸ்வானா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications