தேர்தல் நெருங்குது- திரிபுராவில் பாஜகவுக்கு அடிமேல் அடி- 5-வது எம்.எல்.ஏ. கட்சியை விட்டு எஸ்கேப்!
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில பாஜகவில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறி உள்ளனர்.
திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது.

திரிபுராவைப் பொறுத்தவரை இடதுசாரிகள், காங்கிரஸ் என்கிற இரு கட்சிகள் நிலைமைதான் இருந்து வந்தது. இம்மாநிலத்தில் பாஜகவால் ஒரு கவுன்சிலர் இடம் கூட பெற முடியாத காலம் இருந்தது. ஆனால் திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சியை கூண்டோடு ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கபளீகரம் செய்தது பாஜக. இதனால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
திரிபுரா சட்டசபையில் தற்போது பாஜகவுக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சிபிஎம் கட்சிக்கு 15; காங்கிரஸுக்கு 1 எம்.எல்.ஏ. என இருந்தனர். 5 இடங்கள் காலியாக உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 29 எம்.எல்.ஏக்கள். தற்போது பாஜகவின் எண்ணிக்கை 29 ஆகவும் ஐபிஎப்டி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 2 ஆகவும் குறைந்துள்ளது.
திரிபுரா பாஜக கூட்டணி ஆட்சியான உட்கட்சி மோதலால் மிக மோசமான தள்ளாட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கூட்டணி அரசில் இருந்து எம்.எல்.ஏக்கள் வெளியேறி வருகின்றனர். பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி, மொத்தம் 5 எம்.எல்.ஏக்களில் 3 பேரை இழந்தது. இதேபோல் பாஜகவும் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்களை இழந்து வந்தது. கடந்த ஓராண்டில் 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். தற்போது 5-வது எம்.எல்.ஏவும் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி உள்ள திபா சந்திரா, 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
பாஜக கூட்டணி அரசில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏக்கள் திப்ரா மோதா எனப்படும் மாநில கட்சியில் இணைந்து வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் இந்த கட்சிதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications