For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுரா சட்டசபை தேர்தல்: 4 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவு

By Siva
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று முடிந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

திரிபுரா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tripura assembly election: Voting begins

59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சாரிலம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ராமேந்திர நாராயண் டெப்பர்மா மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவை ஆளும் சிபிஎம் கட்சியை தோற்கடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tripura assembly election voting has begun on sunday by 7 am. 59 out of 60 constituencies have gone for polling today. Polling for Charilam constituency has been deferred due to the death of CPM candidate Ramendra Narayan Debbarma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X