திரிபுராவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் 1993 ல் முதல் ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

    அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது. அக்கட்சியின், திரிபுரா மாநில செயலாளர் பிஜன் தார் "மாநிலத்தில் நிச்சயம் எட்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும். திரிபுரா மக்கள் மாநிலத்தின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்காக நிச்சயம் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களித்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

     Tripura assembly elections : Ruling CPI(M), BJP Confident Of Forming Government

    ஆனால் பாஜக திரிபுரா மாநில தலைவர் பிப்லப் குமார் தேவ் "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிச்சயம் அடுத்த ஆட்சி பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் அமைக்கும்" என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின. 65 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பாஜக இடையே இதுவரை நேரடிப் போட்டி ஏற்பட்டதில்லை.

    திரிபுரா 1972 ஜனவரியில் முழு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி 1978 முதல் இங்கு ஆட்சியில் இருக்கிறது. 1972-1977 மற்றும் 1988-1993 என மொத்தம் 11 ஆண்டுகள் மட்டும் வேறு கட்சிகள் ஆட்சி செய்தன.

    1988 - 93 காலகட்டத்தில் காங்கிரஸ் திரிபுரா உபஜதி ஜீபா சமிதி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. 1993-98 கால கட்டத்தில் தசரத் தேவ் முதல்வராகவும், 1998-2018 வரை மாணிக் சர்கார் முதல்வராக இருக்கின்றனர். கூட்டணிகளுடன் இதுவரை தேர்தலை சந்தித்த காங்கிரஸ் இந்த முறை தனித்து தேர்தல் களமிறங்கியுள்ளது.

    ஹரிலம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கான தேர்தல் மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2013 சட்டசபை தேர்தல்களில் திரிபுராவில் 91 மற்றும் 92 சதவீத வாக்குகள் பதிவாகின.

    பாஜக முன்னர் தனித்து போட்டியிட்டாலும் 2009ம் ஆண்டுக்குப் பிறகு திரிபுராவில் மலைவாழ் மக்களுக்கு தனி மாநிலம் கோரி போராடும் ஐபிஎஃப்டி கட்சியுடன் இணைந்து கூட்டணியோடு பாஜக தேர்தலை சந்திக்கிறது. மலைவாழ் மக்களுக்கு தனி மாநிலம் என்ற கோரிக்கை தொடர்ந்து அரசியல் கட்சியினரால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

    திரிபுராவில் தற்போது நடந்துள்ள தேர்தலில் 23 பெண் வேட்பாளர்களுடன் 292 வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் சிபிஐ, பார்வேடு பிளாக் மற்றும் புரட்சிகர சோஷியலிச கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பாஜக 50 தொகுதிகளிலும், ஏனைய 9 தொகுதிகள் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 59 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்டுள்ளது.

    இடதுசாரி மற்றும் பாஜக கூட்டணி நடுவே முன்னிலை நிலவரம் மாறி மாறி வருகிறது. சில நேரங்களில் பாஜக கூட்டணியும், சில நேரங்களில் இடதுசாரியும் முன்னிலை பெறுகிறது.

    9 மணியளவிலான நிலவரப்படி, இடதுசாரி 22 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+