திரிபுராவில் இழுபறி.. நெருங்கி வந்த கம்யூனிஸ்ட்.. பாஜகவிற்கு சிக்கல்? ஜீ எக்சிட் போல் கணிப்பு!
திரிபுராவில் இழுபறி நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அகரத்தலா: திரிபுராவில் பாஜக ஆட்சி நிலவி வரும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அங்கே போட்டி கடுமையாக இருக்கும் என்று ஜீ நியூஸ் - மெட்ரீஸ் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்படலாம் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜக ஆட்சி அமைத்து அங்கு பிப்லாப் குமார் ஆட்சி அமைத்த நிலையில் கடந்த வரும் அவர் மாற்றப்பட்டார். இவரை அடுத்து பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா முதல்வராக நியமிக்கப்பட்டார். தேர்தலை மனதில் வைத்து மாணிக் சாகா அங்கே பாஜகவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும்.

மாணிக் சர்க்கார்
2018ல் மாணிக் சர்க்காரின் 4 முறை ஆட்சிக்கு முடிவு கட்டி அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி திரிபுரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. மாணிக் சர்க்கார் ஆட்சிக்கு நாடு முழுக்க நல்ல பெயர் இருந்தும் கூட இளைஞர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. இளம் தலைமுறை வாக்காளர்கள் இடையே பாஜக பெற்றமதிப்பு, பிரபலம் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது. சிபிஐ - சிபிஎம் சரியாக பிரச்சாரம் செய்யாததும் இதற்கு காரணமாக இருந்தது. முக்கியமாக இளைஞர்களை கவர அங்கே பாஜக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் தொடங்கி பல்வேறு சமூக வலைத்தளங்கள் வழியாக பாஜக பிரச்சாரங்களை செய்ததன் மூலம் 2018ல் ஆட்சியை பிடித்தது.

பிப்லாப்
இதையடுத்து அங்கு பிப்லாப் குமார் தேவ் முதல்வராக பதவி ஏற்றார். இவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடந்த வருடம் மே மாதம் மாணிக் சாகா முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் திரிபுரா பாஜக ஆட்சி நிலவி வரும் நிலையில், அங்கே போட்டி கடுமையாக இருக்கும் என்று ஜீ நியூஸ் - மெட்ரீஸ் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது. திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

மெஜாரிட்டி
பாஜக 29-36 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜக ஒருவேளை 31 இடங்களை அதற்கு மேல் வென்றால் ஆட்சியை பிடிக்கும். ஆனால் 29 என்ற நிலைக்கு சென்றால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும் என்று கணிப்பு தெரிவிக்கிறது. கருத்து கணிப்பில் இரண்டிற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் அங்கே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படலாம்.

இடதுசாரிகள்
அதாவது இழுபறி ஏற்படலாம் என்று கணிப்பு தெரிவிக்கிறது. இடதுசாரிகள் கூட்டணி 13-21 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.மற்ற காட்சிகள் எதுவும் அங்கே வெல்ல வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதனால் அங்கே தேர்தலுக்கு பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications