மிசோரமில் இருந்து 11 பேரை கடத்திய திரிபுரா தீவிரவாதிகள்!
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: மிசோரம் மாநிலத்தில் இருந்து 11 கட்டுமான தொழிலாளர்களை திரிபுரா தீவிரவாதிகள் கடத்திச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென் அஸ்ஸாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் திரிபுரா- மிசோரம் எல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஆயுதம் தாங்கிய திரிபுரா தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட அவரும் வங்கதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியும் 3 திரிபுரா வர்த்தகர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்த கடத்தலில் திரிபுரா தனிநாடு கோரும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற இயக்கத்தினரே ஈடுபட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications