பாப்பா ஆய் போயாச்சா.. நான்தான் கழுவி விடுவேன்.. தெலுங்கானாவில் ஒரு கருமம்!

Subscribe to Oneindia Tamil

தெலங்கானா: இதுக்கும் மேல... சாரி,... சாரி.. இதுக்கும் கீழே யாராலும் இறங்க முடியாது!

இப்போது நாட்டில் இருக்ககூடிய ஒரே முக்கிய குறை எப்போடா இந்த 5 மாநில தேர்தல்களும் நடந்து முடியும் என்பதுதான். இந்த வேட்பாளர்கள் தொல்லை தாங்கவே முடியல!!

ஒருத்தர் கரண்டி பிடிச்சி சோறு ஆக்குகிறார்.. ஒருத்தர் கட்டிங், ஷேவிங் என செய்கிறார்... ஒருத்தர் எந்த வீட்டில் எழவு நடக்குதோ அந்த வீட்டுக்கு போய் பிணத்தை தூக்கி அடக்கம் பண்ணிட்டு வர்றாரு, இன்னொருத்தர் என்னை அடிக்க வெச்சுக்கங்கன்னு செருப்பை தூக்கிட்டு அலையறார்.. இன்னொருத்தர் எல்லாருக்கும் ஷூ பாலிஷ் போட்டுட்டு வர்றார்.. எதுவுமே புரிய மாட்டேங்குது.

வாக்கு கேட்க போனார்

வாக்கு கேட்க போனார்

இது எல்லாத்தையும் இன்னொருத்தர் மிஞ்சிட்டார். அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர். வர்ற போற எலக்‌ஷனில் சதுப்பள்ளி தொகுதியில நிக்க போறார். வாக்கு கேட்க தொண்டர் படையுடன் போய்ட்டு இருந்தவர்தான். ஆனா திடீரென வழியில ஒரு குழந்தை ஆய் போய்ட்டு இருந்தது. அது ஒரு திறந்தவெளி இடம். குழந்தையின் அம்மா அப்படியே ஃப்ரீயா ஆய் போகட்டும்னு நினைச்சு அந்த குழந்தையை வீட்டு முன்னாடி உள்ள திறந்த வெளியில் விட்டுட்டாங்க போல இருக்கு.

ஓடிப்போய் தூக்கினார்

ஓடிப்போய் தூக்கினார்

வேக வேகமாக ஓட்டு கேட்க நடந்து போய்க்கிட்டு இருந்த வேட்பாளர் குழந்தை ஆய் போவதை பார்த்ததும் ஒரு செகண்ட் நின்றுவிட்டார். சிறிது நேரம் குழந்தையையே உற்று பார்த்து கொண்டிருந்தார். கூட வந்தவர்களோ, 'இவர் ஏன் இதை போய் பாத்துட்டு இருக்கார்' என்று முழித்தார்கள். பிறகு அந்த குழந்தை ஆய் போகும்வரை காத்திருந்த வேட்பாளர், ஓடிப்போய் குழந்தையை தூக்கி வந்தார்.

அண்ணே சிரிக்காதீங்க

அண்ணே சிரிக்காதீங்க

வீட்டின் முன்னாடி இருந்த ஒரு ஜக்கில் தண்ணி எடுத்து குழந்தைக்கு ஆய் கழுவ ஆரம்பித்து விட்டார். உடனே இந்த சம்பவத்தை கூட வந்த ஒருவர் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார். வீடியோ எடுப்பதை பார்த்ததும் வேட்பாளர் ஆய் கழுவுவதை போல திரும்பவும் போஸ் கொடுக்கிறார். அப்போது சுற்றி இருந்தவர்களில் ஒருவர் சிரித்துவிடவும், அண்ணே... சிரிக்காதீங்கண்ணே என்று வீடியோகிராபர் சொல்கிறார்.

ஜெய் தெலங்கானா

ஜெய் தெலங்கானா

ஆய் கழுவி முடித்தாயிற்று. ஆனால் இதைவிட கேவலம் என்னவென்றால், வேட்பாளர் என்னவோ வெட்டி முறித்ததை போல, உலக சாதனை என்னவோ செய்து விட்டது போல, அவருடன் இருந்த அல்லக்கைகள் எல்லாம், "ஜெய் தெலங்கானா" என்று முழக்கமிட்டார்கள்.

மரியாதை கிடைக்குமா?

மரியாதை கிடைக்குமா?

இப்படிகூட பிரச்சாரம் செய்வார்களா? எதுக்குமே ஒரு எல்லை வேண்டாமா? இவ்வளவு கீழே இறங்கி வேலை பார்த்தால், தொகுதி மக்களே கூட இந்த வேட்பாளர்களை பற்றி என்ன நினைப்பார்கள்? எப்படி மரியாதை தருவார்கள்? கூட இருக்கும் ஜால்ராக்களே சிரிக்கும்போதே தெரியவில்லையா, எவ்வளவு தரம் தாழ்ந்து போய் கொண்டு இருக்கிறோம் என்று? இப்படி குழந்தைக்கு ஆய் கழுவி விடுகிறார் சரி... ஆனால் இதன்மூலம் வேட்பாளர் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்றுதான் புரியவே மாட்டேங்குதே தேவுடா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+