திருப்பதி: ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம்
திருமலை: பக்கதர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300 ரூபாய் கட்டணத்தில் ‘பிரத்யேக பிரவேச தரிசனம்' தொடங்கப்பட்டது.
அதன் மூலம் பக்தர்கள் ‘வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1' வழியாக சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பக்தர்கள் நீண்ட தூரம் நின்று அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
சில நேரத்தில் தரிசனத்துக்காக பக்தர்கள் 12 அல்லது 15 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல் சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அதிக நேரம் ஆகிறது.

வசதிகள் இல்லை
சிறப்பு, இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறது. ஆனால், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. மழை, வெயில் காலங்களில் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

300 ரூபாய் கட்டணத்தில்
எனவே 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்து உள்ளது.

25000 டிக்கெட்டுகள்
அதன்படி 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு டிக்கெட் கவுண்டர்
அந்த டிக்கெட்டில் தரிசன நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும். தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருமலையில் 14 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன.

எளிதான தரிசனம்
கவுண்ட்டர்களில் பக்தர்கள் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கிக்கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications