டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் டெல்லி போலீசாரால் டிடிவி தினகரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்ததால் கடந்த 15ஆம் தேதி சிறையில் இருக்கும் தினகரன் காணொலிக் காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது காவலை வரும் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications