இடியாப்ப சிக்கலில் டிடிவி தினகரன்.. டெல்லி போலீசாரால் இன்று கைதாகிறாரா?
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பாக தினகரனிடம் 7 மணி நேர விசாரணை முடிவடைந்த நிலையில் ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு மீண்டு்ம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு ஒரு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. அதன்பேரில் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், அவற்றில் ரூ.1.30 கோடி ரொக்கத்தை டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் இருந்து பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. இதையடுத்து தினகரன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. பின்னர் டெல்லி காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னை வந்தார்.
அப்போது டிடிவி தினகரனை சந்தித்து அவரிடம் சம்மன் வழங்கினர். அதில் அவர் 22-ஆம் தேதி டெல்லி போலீஸாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் நேற்று அவர் டெல்லி சென்றார். மதியம் சுமார் 3 மணிக்கு தொடங்கிய விசாரணையில் அவரிடம் சுகேஷ் சந்திரா குறித்தும், வேறு எதற்காகவாவது சுகேஷுக்கு தினகரன் பணம் கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன.
டெல்லி போலீஸார் சரமாரியாக கேள்விகளை எழுப்பி தினகரனை திக்குமுக்காட வைத்தனர். அந்த விசாரணையானது இரவு 10 மணி அளவில் முடிவடைந்தது. இதனிடையே தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதனால் ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் தினகரனை ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் அவரிடமிருந்து மேற்கொண்டு தகவல்களை கக்க வைக்க டெல்லி போலீஸார் முயற்சிப்பர் என தெரிகிறது. அவர் சொல்லும் விளக்கத்தை வைத்து விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யக் கூடும் என்று தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications