சின்னத்திற்கு லஞ்சம்.. டிடிவி தினகரனிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்திய டெல்லி போலீஸ்
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டெல்லி போலீஸாரின் உத்தரவை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் ஆஜரான தினகரனிடம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்கு ஆஜரான தினகரனிடம் தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு அணிகளிடம் விசாரணை நடத்தயிருந்த வேளையில் அந்த சின்னத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தினகரன் குறுக்கு வழியை தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமான சுகேஷ் சந்திரா என்பவர் தனக்கு தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாகவும், தான் நினைத்தால் சசிகலாவையும் வெளியே கொண்டு வரமுடியும் என்றும் புருடா விட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரட்டை இலையை பெற இருவரும் ரூ.60 கோடி வரை பேரம் பேசினர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த டெல்லி குற்றவியல் போலீஸார் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அறையில் இருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் தினகரனுடன் பேரம் நடத்தியது உண்மை என்பன உள்ளிட்ட பல்வேறு தகல்களை சுகேஷ் வாக்குமூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக தினகரன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று டெல்லி காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தினகரனை சென்னையில் சந்தித்து சம்மன் அளித்தார்.
அதன்படி தினகரன் நேற்று முன்தினம் டெல்லி சென்று குற்றவியல் போலீஸாரிடம் 3 மணிக்கு ஆஜரானார். அப்போது 7 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் தினகரன் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து இரவு 12.30 மணி வரை விசராணை நடைபெற்றது. அதேபோல் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications