சசிகலா அக்காள் மகன் தினகரனுக்கு டெல்லியில் காத்திருக்கும் புதுப் பதவி?
டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தனது குடும்பத்துக்கு தெரிய வேண்டும் என சசிகலா தரப்பு விரும்புவதால் டிடிவி தினகரனை இந்தப் பொறுப்புக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பேரிடியாக வந்து விழுந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சிறைக்கு செல்லும் முன்பாகவே கட்சி அதிகாரம் தனது குடும்பத்திடம் தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சசிகலா, ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தனது அக்காள் மகன் டிடிவி.தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமித்து கட்சிப் பொறுப்பையும் ஆட்சி பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்கு சென்றுவிட்டார்.

டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி
இதையடுத்து கட்சியும் ஆட்சியும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசு தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அரசின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக கவனிக்க டிடிவி தினகரனை டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக்க சசிகலா குடும்பம் முடிவு செய்துள்ளது.

கவர்னரின் ஒப்புதல் வேண்டும்
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அந்தப்பதவி கேபினட் அந்தஸ்து என்பதால் அதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறவேண்டுமாம்.

டிடிவி.தினகரனுக்கு சிக்கல்
டிடிவி தினகரன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கவர்னர் அவருக்கு ஒப்புதல் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எப்படியாவது டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டிடிவி தினகரனை நியமித்தே ஆக வேண்டும் என்பதில் சசிகலாவின் குடும்பம் தீவிரமாக உள்ளது.

டெல்லியில் தங்கியிருந்தது இதற்குதான்
கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரனும் சென்று இருந்தார். முதல்வர் சென்னை திரும்பிய நிலையில், தினகரன் திரும்பாமல் டெல்லியில் தங்கியிருந்தது இதற்குதான் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து அதிகாரமும் பெறுவார்
டெல்லிக்கான தமிழக அரசின் பிரதிநிதி டெல்லியில் தங்கியிருந்து தமிழகத்திற்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரமும் பெறுவார்.

சசிகலாவின் விருப்பம்
இந்த பொறுப்பில் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இருக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளதாக தெரிகிறது. அரசு செயல்பாடுகள் என்ன, அரசின் முக்கிய நடவடிக்கைகள் தனது குடும்பத்திற்கு தெரிய வேண்டும் என்பதில் சசிகலா ஆர்வமாக உள்ளார். இதற்காக இந்தப் பொறுப்பிற்கு தினகரன் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications