தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்... தினகரனின் ஜாமீன் மனு 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், மல்லி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை எப்படியாயினும் பெற்று விட வேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சுகேஷையும், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோர் கடந்த 1-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவல் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த 18-ஆம் தேதி டெல்லி நீதிமன்ற நீதிபதி பூனம் சௌத்ரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தினகரனின் ஜாமீன் மனுவானது இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி பூனம் செளத்ரி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications