டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன் !
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி.தினகரன் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு.

இதுதொடர்பாக கடந்த 26ஆம் தேதி டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தது டெல்லி போலீஸ். சென்னையில் பல்வேறு இடங்களில் தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டிடிவி தினகரனை மே 15 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் மே 15 வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தினகரனுக்கு முதல் சிறைவாசமாகும். கனிமொழியும், ராசாவும்தான் தமிழகத்திலிருந்து கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அரசியல்வாதிகள். இருவரும் திமுகவினர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் திஹார் சிறைக்கு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications