விசாரணை தீவிரம்.. டிடிவி தினகரனை இன்று சென்னை அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கைதான டி.டி.வி. தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவரை சென்னை அழைத்துவர டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீசார், 7 நாட்கள் காவல் கேட்ட நிலையில், 5 நாட்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளது, கோர்ட். இதையடுத்து மீண்டும் தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடத்த உள்ளது டெல்லி நீதிமன்றம்.

கைதுக்கு முன்பாக தொடர்ச்சியாக 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. விசாரணை நடத்தப்பட்ட நேரத்தை கூட்டிப் பார்த்தால் சுமார் 35 மணிநேரங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அடுத்த 5 நாட்களும், தினகரனை பெங்களூர், சென்னை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அவரை சென்னை அழைத்துச் செல்கிறது டெல்லி போலீஸ். சென்னையில் அவரிடம் பணப்பட்டுவாடா எப்படி ஆரம்பித்தது என்பது குறித்து விசாரணை நடைபெறும். தினகரன் லஞ்சம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் பெங்களூரை சேர்ந்தவராகும். மேலும் இந்த வழக்கோடு தொடர்புடைய இடங்கள் என்பதால் கொச்சி மற்றும் பெங்களூருக்கு தினகரனை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications