செம ஷாக்.. 41 பேரை மீட்க இன்னும் இவ்வளவு நாள் ஆகுமா? சர்வதேச சுரங்க மீட்பு நிபுணர் புதுக்குண்டு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 13 நாட்களாகியும் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் தான் அவர்கள் மீட்க இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும், கிறிஸ்துமஸ்க்கு அவர்கள் வீடு திரும்புவார்கள் எனவும் புதுக்குண்டை தூக்கி போட்டுள்ளார் சர்வதேச சுரங்க மீட்பு நிபுணரான அர்னால்ஸ்ட் டிக்ஸ்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 12ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தின் உள்ளே 41 தொழிலாளர்கள் சிக்கினர்.

இவர்களை மீட்பதற்கான பணி உடனடியாக தொடங்கியது. பேரிடர் மீட்பு படையினர், சுரங்க நிபுணர்கள், தீயணபை்பு வீரர்கள் வரவழகை்கப்பட்டு மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.
இருப்பினும் அந்த சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பது என்பது சுலபமான காரியமாக இல்லை. அங்குள்ள இடம் நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் அதிர்வுகளால் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியும் சவால் நிறைந்ததாக உள்ளது. மீட்பு பணிக்கான ஆகர் இயந்திரத்தின் மூலம் இந்த பணி நடந்து வந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் இந்த மீட்பு பணியும் தடைப்பட்டது. அதன்பிறகு கான்கிரீட் கம்பிகள், பிளேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் மீட்புபணி தொடங்கி உள்ளது. மேலும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் மீட்பு பணியை தாமதப்படுகிறது.
இதனால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் எப்போது பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சுரங்ப்பாதை மீட்பு பணிகளில் கைதேர்ந்தவர்.
இந்நிலையில் தான் அர்னால்ட் டிக்ஸ் தற்போதைய மீட்பு பணி குறித்தும், தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛இது மலைப்பகுதியில் நடக்கும் மீட்பு பணி என்பதால் மிகவும் பிரச்சனையாக உள்ளது. இதில் அவசரப்படக்கூடாது. முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மீட்டு பணி எப்போது முடியும் என்பதை கூறிவிட முடியாது. மீட்பு பணிக்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். இன்று முதல் ஒரு மாதம் கூட ஆகலாம். ஆனால் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள் என நம்பலாம். இந்த மீட்பு பணியில் நாங்கள் ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்துள்ளோம். அது என்னவென்றால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான். மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்த பணி என்பது வேகமாக நடக்கும் என உறுதியளிக்கவில்லை. மாறாக இந்த பணி சவால் நிறைந்ததாக தான் இருக்கும் என கூறினேன். அது தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.
தற்போது சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்த அர்னால்ட் டிக்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கிய நிலையில் வேகமெடுத்தது. ஆனால் தற்போது சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் மீட்பு பணிக்கு பல இடையூறுகள் உள்ளன. இதனால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இந்த அர்னால்ட் டிக்ஸ் சுரங்க மீட்பு பணிகளில் மிகவும் கைதேர்ந்தவர். இவர் பிரிட்டனில் பள்ளி கல்வியை முடித்தார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்றார்.
இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான தொழிலில் எக்ஸ்பர்ட்டாக திகழ்கிறார். அதன் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு அவர் ஆலோசகராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்தியாவில் டெல்லி மெட்ரோ சுரங்க பாதைக்கும் இவர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications