திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்- தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் வரும். அதன்படி இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 16ம்தேதி முதல் 24ம்தேதி வரை நடக்கிறது. இது வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகும். மற்றொரு பிரம்மோற்சவம் அக்டோபர் 14ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடக்கிறது. இது நவராத்திரி பிரம்மோற்சவம் ஆகும்.

சந்திரபாபு நாயுடு
வருடாந்திர பிரம்மோற்சவத்தை செப்டம்பர் 16ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தொடங்கி வைக்கிறார்.

ரத உற்சவம்
பிரம்மோற்சவ தினங்களில் காலையிலும் மாலையிலும் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் அலங்கார ஊர்திகளில் உலா வருவார்.
வருடாந்திர பிரம்மோற்சவத்தில் மகாரத உற்சவம் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவத்தில் தங்க ரத உற்சவம் நடைபெறும்.

கருடசேவை தரிசனம்
வழக்கமாக பிரம்மோற்சவத்தின்போது வார நாட்களில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும் போது சுமார் 5 லட்சம் முதல் 7 லட்சம் பக்தர்கள் வரை திருப்பதியில் கூடுவார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவத்தின் போதும் கருட சேவை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ( செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 18), அந்த நாட்களில் இதை விட அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

சேவைகள் ரத்து
2 பிரம்மோற்சவங்களின் போதும் ஏழுமலையான் சுப்ரபாத சேவை தவிர அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படும். அப்போது கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வயதானவர்கள், ஊனமுற்றோர், கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும்.

தங்கும் அறைகள்
அதிகாலையில் நடைபெறும் அங்கபிரதட்சணத்துக்கும் டோக்கன் வழங்கப்படாது. தங்கும் அறை முன்பதிவும் நிறுத்தப்படும். முன் கூட்டியே வருபவர்கள் அறைகளை எடுத்து தங்கிக் கொள்ளலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications