பூராம் ஆட்டுமூளையா இருக்கே ... பெங்களூர் வன்முறை குறித்து தமிழர்கள் வேதனை #cauvery

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரில் தமிழர்களையும் தமிழர்களின் வாகனங்களையும் குறி வைத்து கன்னட அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல் தமிழர்களை பெரும் வேதனை அடைய செய்துள்ளது. இட்லிக் கடையைக் கூட விடாமல் கன்னட அமைப்பினர் தாக்கியது குறித்து தமிழர்கள் பலரும் டிவிட்டரில் வேதனை வெளியிட்டுள்ளனர்.


ஜெயதேவன் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், பெங்களூரில் மதுரை இட்லிக் கடையை சிலர் கும்பலாக வந்து தாக்கியது பெரும் வேதனையைக் கொடுப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.


இது பெங்களூரு பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை கன்னட வெறியர்கள் தாக்கி அடித்து நொறுக்கும் காட்சி. தமிழகம் செல்லக் கூடிய பேருந்துகள் இங்கிருந்துதான் புறப்படும். அப்பகுதியில் உள்ள கடைகளைத்தான் இந்த வெறியர்கள் அடித்து நொறுக்குகின்றனர்.


இது ஹேப்பினஸ் ஆப் ஆல் என்பவர் போட்டுள்ள டிவிட். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து போராட்டங்கள். ஏன் தமிழக மக்களையும், வாகனங்களையும் குறி வைத்துத் தாக்குகிறார்கள். ஆட்டு மூளை என்று கூறி வேதனைப்பட்டுள்ளார் இவர்.


இது தமிழக பதிவெண் கொண்ட லாரிகள். விஷமிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட காட்சி. யாருக்கு என்ன லாபம் இதனால்?

இதற்கிடையே, இன்று பிற்பகலுக்கு மேல் ஏற்பட்ட பெரும் பதட்டத்தைத் தொடர்ந்து பலரும் பள்ளி கல்லூரிகளை விட்டு அவசரமாக வீடுகளுக்குத் திரும்பினர். பல அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் வீடுகளுக்கு விரைந்தனர். இதனால் பெங்களூரின் முக்கியச் சாலைகளான எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோடு ஆகியவற்றில் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+