ஒருதலைக்காதல்.. போன் நம்பர் கேட்டும் தரலை.. அதான் கொன்றேன்.. உன்னவ் 2 சிறுமிகள் கொலை வழக்கில் பகீர்
உன்னவ்: உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலித்துவிட்டு போன் நம்பர் கொடுக்காததால் விஷம் கொடுத்து கொலை செய்ததாக இருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Recommended Video

உன்னவ் மாவட்டம்- பாலியல் பலாத்காரத்திற்கு பஞ்சமில்லாத மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் கடந்த புதன்கிழமை வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளது. இவருக்கு கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

போலீஸார் கைது
அவர்களது உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதும் மூவரும் விஷம் குடித்திருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையும் மருத்துவ அறிக்கையும் வெளிவந்தன. இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஒரு தலைபட்சம்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்களை தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் வயல்வெளிக்கு வரும் போது வினய் என்பவர் அவர்களுடன் பேசி பழகி வந்துள்ளார். அதில் ஒரு பெண் மீது வினய் ஒருதலைபட்சமாக காதலை வளர்த்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ அவரது காதலை ஏற்கவில்லை.

சிறுமியை கொல்ல முடிவு
மேலும் அந்த பெண்ணின் போன் நம்பரை வினய் அடிக்கடி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் வினய் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தார். அப்போது வினய் காதலித்த சிறுமிக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வினய் தான் கொண்டு வருவதாக கூறி பூச்சிக் கொல்லி மருந்து கலந்த தண்ணீரை கொடுத்துள்ளார்.

தண்ணீரில் பூச்சிகொல்லி மருந்து
அவர் குடிக்கும் போது மற்ற இரு சிறுமிகளும் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தனர். மற்ற இரண்டு சிறுமிகள் தண்ணீர் குடிப்பதை தடுக்க முயன்றும் தன்னால் முடியவில்லை என வினய் தெரிவித்தாராம். சிறிது நேரத்தில் சிறுமிகள் மயங்கியவுடன் பீதியில் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications