அம்மாவுடன் கள்ளக்காதல்.. கைவிடாமல் வீட்டுக்கு வந்து சென்ற தொழிலாளி.. மகன்களால் நேர்ந்த கதி
காந்திநகர்: குஜராத்தில் தனது அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்து அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற கொத்தனார் அந்த பெண்ணின் 2 மகன்களிடம் சிக்கினார். இதையடுத்து அவர்கள் இருவரும் ஆயுதங்களால் தாக்கி கொத்தனாரை கொன்றனர்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள மோக்சான் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தன் ஜி தாகூர் (வயது 45) கொத்தனார். இவர் கட்டட பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் சஞ்சய் தாகூர் (வயது 27). இன்னொரு மகன் பெயர் ஜெய்ஷ் தாகூர் (23). இந்நிலையில் தான் 2 மகன்களுக்கு தாயான அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கும், கொத்தனார் ரத்தன் ஜி தாகூருக்கு இடையேயான பழக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அதோடு மகன்கள் வீட்டில் இல்லாதபோது ரத்தன் ஜி தாகூர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் எப்படியோ அந்த பெண்ணின் மகன்களான சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூருக்கு தெரியவந்துள்ளது.
இருவரும் ரத்தன் ஜியை கண்டித்துள்ளனர். கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டித்துள்ளனர். அதேபோல் தங்களின் அம்மாவையும் கண்டித்துள்ளனர். இப்படியான உறவு என்பது ஏற்க முடியாதது. இறந்த தந்தைக்கு துரோகம் செய்வது போன்றது என்று அறிவுரையுடன் கண்டித்துள்ளனர்.
ஆனால் ரத்தன் ஜி தனது செயலை மாற்றி கொள்ளவில்லை. அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இதையடுத்து அவர்கள் சார்ந்த சமுதாய தலைவர்களை வைத்து பிரச்சனையை முடிக்க முயன்றனர். அப்போதும் கூட ரத்தன் ஜி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. மகன்கள் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இபு்படியான சூழலில் தான் ரத்தன் ஜியை கொலை செய்ய சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூர் ஆகியோர் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கொண்டு ரத்தன் ஜி மற்றும் அவரது நண்பர் ஜிகுஜி பர்மார் ஆகியோரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ரத்தன் ஜி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications