நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம்
காத்மண்டு: நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் சற்று மிதமானதாகவும் இரண்டவதாக நள்ளிரவு 1.30 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.58 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று அச்சம் அடைந்த நிலையில், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.
பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலடுக்கங்களால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
வீடுகள் அதிர்ந்ததால், வீட்டை விட்டுவெளியேறிய மக்கள் நள்ளிரவு நேரத்திலும் வீதிகளில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்தன. நேபாள வரலாற்றில் மிக மோசமன இயற்கை சேதங்களில் ஒன்றாக அறியப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 8,694 பேர் பலியாகினர். சுமார் 21 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு சுவடுகள் மக்கள் மனதில் இன்னமும் மறையாத நிலையில், மீண்டும் அதே ஏப்ரல் மாதம் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications