"ஹைட் அண்ட் சீக்” காருக்குள் விளையாடிய குழந்தைகள் - பூட்டி வைத்து கொலை செய்த தந்தை!
Subscribe to Oneindia Tamil
குர்கான்: ஹரியானாவின் குர்கான் நகரில் தந்தை ஒருவர் 2 மகள்களையும் காருக்குள் பூட்டி வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமன்சி, பிங்கி ஆகிய இருவரும் தங்களது தந்தையின் காரில் மறைந்து கண்டுபிடிக்கும் ஹைட் அண்ட் சீக் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுமிகளின் தந்தை வேண்டுமென்றே சிறுமிகளை காரில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர், தன் மகள்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவரும் காருக்குள் பூட்டி வைக்கப்பட்டது தெரிய வந்தது.
உடனே சிறுமிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுமிகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமிகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications