8 பேர் பலியான பாட்னா மோடி பொதுக்கூட்ட குண்டுவெடிப்பு: உ.பியில் 2 தீவிரவாதிகள் கைது
டெல்லி: பாட்னாவில் நடைபெற்ற பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் பொதுக்கூட்ட மைதானத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அம்மைதானத்திலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், தீவிரவாதிகள் உட்பட 8 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன் வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பக்ருதீன் மற்றும் அகமது என்றும், இவர்கள் பாட்னா குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications