திகார் சிறையில் எலி போல சுரங்கம் தோண்டி தப்பிய பலே கைதிகள்… ஒருவன் சிக்கினான்
டெல்லி: நாங்க எல்லாம் திகார்லயே சுரங்கம் தோண்டி தப்பிச்சவங்க என்று மார்தட்டி கொள்கின்றனர் இரண்டு திருடர்கள். இதில் ஒருவனை மடக்கிப் பிடித்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் சிறைதான். இந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சாதாரண பிக்பாக்கெட் திருடனில் இருந்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள் வரை அனைத்துத் தரப்பு கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திகார் சிறையில் உள்ள ஒரு செக்டாரின் 7ம் நம்பர் அறையில் பைசன், ஜாவித் என்ற இரண்டு கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். கொள்ளை வழக்கு ஒன்றில் கைதாகி அவர்கள் ஜெயிலுக்கு வந்திருந்தனர். சனிக்கிழமையன்று இரவு அவர்கள் இருவரும் சுவர் ஏறி குதித்து 8ம் நம்பர் அறைக்குள் புகுந்தனர். அந்த அறை கைதிகள் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது. இதை பயன்படுத்தி அவர்கள் இருவரும் இரவு முழுக்க அங்கு சுரங்கம் தோண்டினார்கள்.

சிறைச்சாலை சுற்றுச்சுவர் மிக அருகே அந்த அறை இருந்ததால் சிறிதளவு சுரங்கம் தோண்டியதும் வெளியில் வந்து சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.
நேற்று காலை அறை வாரியாக கைதிகள் இருப்பு சரிபார்பக்கப்பட்டது. அப்போது 7ம் நம்பர் அறையில் இருந்த பைசன், ஜாவித் இருவரும் மாயமாகி இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுக்க சோதனை நடத்திய போது, 8ம் நம்பர் அறையில் இருந்து 2 கைதிகளும் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறைத்துறை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பைசன் பிடிபட்டான். ஜாவித் தலைமறைவாகி விட்டான். அவனை டெல்லி போலீசார் தேடி வருகிறார்கள்.
அதிநவீன உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட திகார் ஜெயில் 2 கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பியது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சுரங்கம் தோண்டுவதற்கான கருவிகள் கைதிகள் கையில் எப்படி கிடைத்தன என்பது பற்றி உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை ஜெயில்ல பள்ளிக்கூடம் படிச்சவங்க... வேலூர் ஜெயில்ல வெள்ளையடிச்சவங்க என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வார். இனி திகார்லயே சுரங்கம் தோண்டி தப்பினவங்க நாங்க என்று வசனம் வந்தாலும் வரலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications