பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறி 2 பேர் பலி
ஆக்ரா: ஆக்ரா நகரில் பேருந்து நிலையத்தில் இருந்த பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் ரகப்கஞ்ச் பகுதியில் ஈத்கா பேருந்து நிலையம் அருகே ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் இருந்து வெளியாகும் அசுத்த நீர் கழிப்பறையின் அடியில் உள்ள செப்டிக் டேங்கில் தேக்கி வைக்கப்பட்டு, அந்த தொட்டி நிரம்பிய பிறகு லாரிகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால், நெடுநாட்களாக இந்த அசுத்த நீர் வெளியேற்றப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று அந்த செப்டிக் டேங்குக்குள் அதிகப்படியான விஷவாயுவின் அழுத்தம் ஏற்பட்டு, அந்த தொட்டி வெடித்து சிதறியது.
அப்போது, அந்த கழிப்பறையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அமர்ந்திருந்த பலர் மலநீரில் தவறி விழுந்தனர். இதில் விஷவாயு தாக்கி இருவர் பரிதாபமாக பலியானார்கள். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரும், ஆக்ரா நகராட்சி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications