உணவு, தண்ணீர் இல்லாமல் இருட்டறையில் கிடந்த குழந்தைகள்... 3 நாளுக்கு பிறகு மீட்கப்பட்ட அவலம்!
டெல்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள் 3 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சமயபூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு பப்லு (35), தன்னுடைய மனைவி ரோஷி மற்றும் இரு குழந்தைகள் அல்கா (8), ஜோதி (3) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை விட்டுவிட்டு ரோஷி சென்றுவிட்டார்.

இதையடுத்து, எந்த வேலைக்கும் செல்லாத பப்லு தன்னுடை இரு குழந்தைகளையும் ஒரு இருட்டறையில் அடைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் பூட்டிய அறையை உடைத்து பார்த்ததில் உடலில் புழுக்கள் தோன்றி மோசமான நிலையில் இரு குழந்தைகளும் சுருண்டு கிடந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு பாபா அம்பேத்கார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் குழந்தைகளின் தந்தை பிண்டி ஒரு முழுநேரக் குடிகாரர் என்பதும் குடியில் இரு குழந்தைகளையும் வீட்டில் வைத்துப் பூட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், மூன்று நாட்கள் வரை தண்ணீர், சாப்பாடு இல்லாமல் இரு குழந்தைகளும் இருட்டறைக்குள் தவித்துள்ளனர். வெளிச்சம் துளியும் இல்லாததால் இரண்டு குழந்தைகளின் உடல்களும் புழுக்கள் தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. தற்போது சிகிச்சையினால் இருவரின் உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications