ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பிணைய கைதி விடுவிப்பு.. 5 மணி நேரம் அதிரடி ஆப்ரேசன்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மாவட்டம் படோடா நகரில் வீட்டுக்குள் சென்று பதுங்கிய மூன்று தீவிரவாதிகள் வீட்டில் இருந்தவரை பணயக் கைதியாக பிடித்தனர். இந்நிலையில் 5மணி நேர தேடுதலுக்கு பின்னர் என் கவுண்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 3 போலீசார் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு விலக்கிகொள்ளப்பட்டாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் உள்ளன.
ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலமும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தீவிரவாதிகள் வழிமறிப்பு
தற்போது ஜம்மு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜம்மு பகுதியில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோடே நகரில் பொதுமக்கள் சென்ற பேருந்து ஒன்றை தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து நிறுத்த முயன்றனர்.

பாதுகாப்பு படைக்கு தகவல்
ஆனால் பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுனர், உடனடியாக பேருந்தை அங்கிருந்து வேகமாக ஓட்டிச்சென்றார். தீவிரவாதிகள் அதன்பிறகு வீடுகள் உள்ள பகுதிக்கு சென்ற பதுங்கி கொண்டனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்று தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது.

பதுங்கிய தீவிரவாதிகள்
ஆனால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதுடன் படோடே நகருக்குள் புகுந்தனர். பின்னர் அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கி கொண்டு அங்கிருந்தவரை பணைய கைதியாக பிடித்துக்கொண்டனர். இதனிடையே தீவிரவாதிகள் எந்த வீட்டில் உள்ளனர் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் இறங்கினர். கனமழை பெய்துவந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பணய கைதி விடுவிப்பு
எனினும் விடால் தீவிரமாக தேடிய ராணுவத்தினர் மூன்று தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்த வைக்கப்பட்டவரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.மேலும் தீவிரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து தீவிரமாக போலீசார் அந்த பகுதியில் தேடி வருகின்றனர். இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications