அடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள்.. கருப்பு வெள்ளி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கேரளா
கோழிக்கோடு: கேரளாவுக்கு இன்று கருப்பு வெள்ளிக்கிழமை என்று கூறலாம். அடுத்தடுத்து இரு பெரும் விபத்துக்கள் அங்கு நடந்து, 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Recommended Video
இரண்டு சம்பவங்களுமே மூலகாரணம் மழை மற்றும் அதைச்சார்ந்த வெள்ளம் ஆகியவை தான்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி நிலச்சரிவு
இந்த நிலையில்தான் இன்று காலை கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை என்ற பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 80 பேர் அங்கு இருந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

துபாய் விமானம்
இந்த பெரிய கோர விபத்து தொடர்பான வடு ஆறும் முன்பாக இன்று இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானம் ரன்வேயில் சறுக்கி இரண்டாக பிளந்தது. இதில் தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி 16 பேர் பலியாகி உள்ளனர். இதில் விமானியும் ஒருவர்.

அடுத்தடுத்த செய்திகள்
காலை முதல் தொடர்ந்து செய்தி சேனல்கள் இடுக்கி மாவட்ட நிலச்சரிவு தொடர்பாக செய்திகளை வழங்கி வந்தன. இரவு, கோழிக்கோடு கோர விபத்து காரணமாக அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆகமொத்தம் காலை முதல் தொடர்ந்து மோசமான இரு கோர விபத்துக்கள் தொடர்பான செய்திகள்தான் தேசிய அளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோழிக்கோடு நிலவரம்
கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்துக்கு அருகே கொரோனா வைரஸ் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அதிகமாக இருக்கிறது. அவசரத்திற்காக அங்கிருந்த நோயாளிகளும் ஓடிவந்து விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மற்றொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த அசம்பாவித சம்பவங்களால் கேரள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications