உடம்பெல்லாம் பதறிடுச்சு.. டூவீலரில் போன பொண்ணை திடீர்னு காணோம்.. கடைசியில பாத்தால்? சபாஷ் துப்பாக்கி
கான்பூர்: டூவீலர் கற்றுக்கொள்ள ஆசை ஆசையாக சென்ற பெண்ணுக்கு, பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் காசியாபாத் நகரின் ட்ரோனிகா நகர காவல் நிலையத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 23 வயதாகிறது.. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.. கடந்த வியாழக்கிழமை சாயங்காலம், தன்னுடன் வேலைபார்க்கும் ஒரு ஆண் நண்பர், மற்றும் பெண் தோழியுடன் வெளியே வந்துள்ளார்.
இளம்பெண்: அப்போது இந்த 2 நண்பர்களும், இளம்பெண்ணுக்கு டூவீலர் ஓட்ட கற்று தந்துள்ளனர்.. அதனால், ஆளில்லாத இடத்தில் ஸ்கூட்டி பழக உதவி செய்தனர்.. அப்போது, இவர்களை, மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆனால், இவர்கள் நோட்டமிடுவது இவர்களுக்கு தெரியாது..

ஸ்கூட்டி ஓட்ட கற்று கொண்டிருந்த பெண், ஆரம்பத்தில் லேசாக தடுமாறினாலும், பிறகு ஓரளவு பழகிவிட்டார். அதனால், சற்று கூடுதலான தூரத்துக்கு டூவீலரை ஓட்டிச் சென்றார்.
போக்சோ சட்டம்: அப்போது, இந்த பெண் தனிமையில் சிக்கிவிட்டார்.. இதுதான் சாக்கு என்று நினைத்த மர்மநபர்கள், அந்த பெண்ணை, அங்கிருந்த ஒரு ஃபேக்டரி கட்டிடத்துக்கு தூக்கி சென்று, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதனால், பாதிக்கப்பட்ட பெண், அங்கிருந்து தப்பி, ட்ரோனிகா போலீசில் புகார் தந்தார்.. இதனால் போலீசாரும் உடனடியாக களமிறங்கி, தீவிர விசாரணையில் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது ஜூனைத் என்ற நபரை, துப்பாக்கியால் முழங்காலுக்கு கீழே சுட்டு பிடித்தனர்.
ஜூனைத்திடம் விசாரணை மேற்கொண்டதில், கூட்டாளிகள் 2 பேர் பற்றின தகவல் கிடைக்கவும், அவர்களையும், பிடிக்க முயன்றனர்.. ஆனால், போலீஸாருக்கு எதிராக ஆயுதங்களை பிரயோகித்து, 2 பேரையுமே வளைத்து பிடித்தனர். இப்போது சுற்றிவளைக்கப்பட்ட 3 குற்றவாளிகளையுமே, பாதிக்கப்பட்ட பெண், அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்.
கூட்டாளிகள்: இவர்களை தவிர, மேலும் 2 பேர் இருக்கிறார்களாம்.. அவர்களையும் பிடிக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.. ஒருவேளை, அவர்கள் சரணடையாவிட்டால் என்கவுன்டர் செய்யப்படுவார்கள் என்றும், மீடியாக்கள் மூலம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பது உத்தரபிரதேசத்தில்தான். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே அங்கு கேள்விக்குறிதான்.. இதைத்தான் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.. ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லும் மாநில அரசு, பெண்கள் மீதான வன்முறைகளில் அலட்சியம் காட்டுகிறதே என்ற கேள்வியை முன்வைத்தனர்.
பாலியல் வக்கிரம்: இதற்கு பிறகுதான், முதல்வர் யோகி, பகிரங்கமான குற்றங்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு காவல்துறைக்கு சுதந்திரம் தந்தார்..
அதனால்தான், மேற்கண்ட பாலியல் குற்றவாளிகளைகூட, முழங்காலுக்கு கீழே சுட்டுப்பிடிக்க முடிந்தது.. அச்சமின்றி குற்றங்களை நிகழ்த்துவோருக்கு எதிராகவும் போலீஸார் இந்த என்கவுன்டர்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படும் என்று தெரிந்தும்கூட, பாலியல் வக்கிரங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.
சட்டங்கள்: இப்படித்தான் தெலுங்கானாவிலும் 3 வருடங்களுக்கு முன்பு பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை, நாட்டு மக்கள் வரவேற்றிருந்தனர்.. ஆனால், எவ்வளவுதான்கொடூர தண்டனைகள் தந்தாலும் இதுபோன்ற காமுகர்கள் திருந்த வாய்ப்புகளே இருப்பதில்லை.. போக்சோ சட்டம் இந்த நாட்டில் இருந்தும்கூட, இவ்வளவு தவறுகள் நடக்கிறதென்றால், அந்த போக்சோ சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே அர்த்தமாகிறது..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications