பலாத்கார முயற்சி... ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்கள்
தானே: ஆட்டோ ஓட்டுநர் பலாத்காரம் செய்ய முயன்றதை அடுத்து இரண்டு இளம் பெண்கள் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் மகராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரிகா பாட்டீல்(22), பிரதிஷ்கா பவுர்னிக்(17) என்ற இரண்டு இளம் பெண்கள் மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று மாலை அகில பாரத வித்யார்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) நடத்திய ஒரு விழாவில் பங்கேற்க சென்றனர். இவர்கள் வீடு திரும்புவதற்காக இரவு சுமார் 9 மணியளவில் மஹ்லிர் திரையரங்கம் அருகே ஒரு ஆட்டோவில் ஏறினர்.

கேட்பரி சந்திப்பை நெருங்கியபோது, அவர்கள் வீட்டிற்கு போவதற்காக கூறிய பாதையை தவிர்த்து மாற்றுப்பாதையை நோக்கி ஆட்டோவை வேகமாக டிரைவர் ஓட்டிச்சென்றார்.
அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உஷாரடைந்த அவர்கள் இருவரும் தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் படுகாயமடைந்ததால் ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்த போலீஸ் துணை கமிஷனர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ டிரைவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications