போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தை... 12 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
ஆந்திராவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
விஜயவாடா: ஆந்திராவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்டனர் மீட்பு படையினர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் உம்மிடிவரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ராவ். இவர் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் 20 நாட்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு தோண்டினார். அதில் தண்ணீர் வராத நிலையில், ஆழ்துளை கிணற்றை அப்படியே மூடாமல் விட்டுள்ளார்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன ராவின் 2 வயது மகன் சந்திரசேகர நேற்று அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதில் அவன் 20 அடி ஆழத்துக்குச் சென்று சிக்கிக் கொண்டான். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணிக்கு இடையே, குழந்தை சந்திரசேகரும் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டது. இதனால் குழந்தை உயிருக்குப் பாதிப்பு நேரவில்லை.
12 மணி நேரங்களுக்குப் பின்னர் சிறுவனை மீட்பு குழு உயிருடன் மீட்டது. இதனையடுத்து குழந்தை முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். மீட்பு குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லை என்று அக்கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications