உபேர் டாக்சி டிரைவர் கைதை அல்வா கொடுத்து கொண்டாடிய உ.பி. கிராமம்
மெய்ன்புரி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டதை உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் முன்னதாக கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதற்கும் முன்பு 2011ம் ஆண்டும் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி திகார் சிறையில் 7 மாதங்கள் இருந்தார். ஆனால் பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்த வழக்கில் சிக்கியுள்ளார். இவ்வாறு தொடர் குற்றங்கள் செய்து வந்த யாதவ் கைது செய்யப்பட்டதை அறிந்த உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராம் நகரைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
பெண்கள் பிறருக்கு அல்வா வழங்கியும், சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் யாதவின் கைதை கொண்டாடினர்.
யாதவ் ராம் நகர் கிராமத்தில் உள்ள பெண்களை சீண்டிக் கொண்டும், சில்மிஷம் செய்தும் பல முறை போலீசில் சிக்கியுள்ளார். குண்டர் சட்டத்தில் கூட கைதான அவரை மெய்ன்புரியில் நுழைய போலீசார் தடை விதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications