டெல்லியை விட்டு போக மாட்டோம், தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: உபேர் அடம்
டெல்லி: டெல்லி அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும், நகரை விட்டு வெளியேறப் போவது இல்லை என்றும் உபேர் டாக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் டாக்சி நிறுவனம் சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உபேர் நிறுவன டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது பெண்ணை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் கைதான அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் உபேர் டாக்சிக்கு டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உபேர் நிறுவனம் அரசின் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லியை விட்டு வெளியேறவும் அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உபேர் ஆசிய பிரிவின் தலைவர் எரிக் அலெக்சாண்டர் கூறுகையில்,
இந்தியாவில் கால் சென்டர் அமைக்கவும், இந்திய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
உபேர் நிறுவனம் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட பெண் மீண்டு வர உதவ தயாராக உள்ளோம். பணம் தொடர்பாகவும் உதவி செய்ய காத்திருக்கிறோம். அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்வோம். டிரைவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வேலைக்கு எடுக்க தயாராக உள்ளோம் என்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications