உகாண்டா குண்டுவெடிப்புகள்- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய விளையாட்டு வீரர்கள் உயிர் தப்பினர்!
கம்பாலா: உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இன்று அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகாண்டாவில் அல்கொய்தா இயக்கத்துடன் நெருக்கமாக உள்ள ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று தலைநகர் கம்பாலாவில் இந்த இயக்கம் 3 தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியது.

தற்கொலை படை தாக்குதல்கள்
கம்பாலாவில் நாடாளுமன்ற கட்டிடம், மத்திய போலீஸ் அலுவலக கட்டிடம் உள்ளிட்டவை அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் தற்கொலைபடை தீவிரவாதிகள் 3 பேர் மட்டும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகள்
இதனிடையே கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கு அருகேதான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடுத்தத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வீரர்கள் உயிர் தப்பினர்
இப்போட்டிகளில் பங்கேற்க இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கம்பாலாவுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய வீரர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அங்கிருந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
|
வீடியோக்கள் வெளியீடு
மேலும் கம்பாலா வெடிகுண்டு சம்பவ வீடியோக்களையும் இந்திய விளையாட்டு வீரர்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதால் உறவினர்கள் யாரும் பதற்றமோ அச்சமோ அடையத் தேவை இல்லை என்று பயிற்சியாளர் பத்ரிநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Para-Badminton India-ன் ட்விட்டர் பக்கமான @parabadmintonIN-ல் இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்! நாங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி அந்த குண்டுவெடிப்பு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications